திருச்சி காந்தி மார்க்கெட் மூடல்… மறுஉத்தரவு வரும் வரை திறக்கப்படாது: மாநகராட்சி நோட்டீஸ்

 

திருச்சி காந்தி மார்க்கெட் மூடல்… மறுஉத்தரவு வரும் வரை திறக்கப்படாது: மாநகராட்சி நோட்டீஸ்

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத வண்ணம் கண்காணிக்கபட்டு வருகிறது.

கொடிய வகை கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத வண்ணம் கண்காணிக்கபட்டு வருகிறது. ஆனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பெரும்பாலும் காய்கறிகள் வாங்குவதற்கு வெளியே வருகின்றனர். மேலும், சமூக விலகலை பின்பற்றாமல் காய்கறி கடைகளில் குவிகின்றனர். இதன் காரணமாக பல காய்கறி சந்தைகள் மூடப்பட்டு வருகின்றன. 

ttn

அதே போல திருச்சி மக்களின் பிரதான சந்தையாக விளங்கும் காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள மொத்த சில்லறை வியாபாரிகளும் இங்கு தான் காய்கறி வாங்கிச் செல்வார்கள் என்பாதால் கூட்டம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. அதனையடுத்து அந்த மார்க்கெட்டை பொன்மலை ஜி.கார்னர் மைதானத்துக்கு மாற்றி அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இருப்பினும், கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அந்த மார்க்கெட்டை மூடுவதாகவும் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்பட மாட்டாது என்றும் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது. மேலும், இதற்கு மாற்றாக திருச்சியில் எட்டு இடங்களில் சிறு வியாபாரிகள் விற்பனை செய்யும் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.