திருச்சியில் மீண்டும் முகமூடிக் கொள்ளை : 1 கோடியே 47 லட்சம் அபேஸ்…!

 

திருச்சியில் மீண்டும் முகமூடிக் கொள்ளை : 1 கோடியே 47 லட்சம் அபேஸ்…!

இந்த மாதம் துவங்கியதால் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்காக வங்கியில் சுமார் 1 கோடியே 47 லட்சம் பாதுகாப்பு பெட்டகத்தினுள் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் செயல்பட்டு வரும் பாரத் மிகுமின் நிலைய வளாகத்தில் ( BHEL) , பணியாற்றும் ஊழியர்கள் சம்பளத்தை எடுப்பதற்காக  அங்குக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த மாதம் துவங்கியதால் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்காக வங்கியில் சுமார் 1 கோடியே 47 லட்சம் பாதுகாப்பு பெட்டகத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, முகமூடி அணிந்து வந்த நபர்கள் அந்த வங்கியில் உள்ள ஜன்னலை திறந்து அதனுள் நுழைந்து  அந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

BHEL

இன்று காலை, வேலைக்குத் திரும்பிய ஊழியர்கள் வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து, வங்கி ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, இது போன்று சமயபுரம் பஞ்சாப் வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. சம்பளம் கொடுக்க விருந்த பணத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதால் ‘பெல்’ நிறுவன ஊழியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.