திருச்சியில் உதயமான ரூட்டு தல கலாச்சாரம்… சாலைகளை அதிரவைக்கும் இளைஞர்கள்!!

 

திருச்சியில் உதயமான ரூட்டு தல கலாச்சாரம்… சாலைகளை அதிரவைக்கும் இளைஞர்கள்!!

சத்திரம் பேருந்து நிலையத்தில், வாகனங்களில் இளைஞர்கள் செய்யும் அட்டகாசம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

சத்திரம் பேருந்து நிலையத்தில், வாகனங்களில் இளைஞர்கள் செய்யும் அட்டகாசம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

சென்னையில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் அரசாங்கம் ஒரு நம்பர் போட்டு பேருந்து விட்டால், அவ்வழியில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அந்த பேருந்தை, அவர்கள் அப்பன் வீட்டு சொத்துப்போல் ஆடிப்பாடுவதும், சக பயணிகளுக்கு இம்சைகள் தருவதும், பஸ் டே கொண்டாடுவதும், ரூட்டு தல பதவிக்காக அவர்களுக்குள் வெட்டுக்குத்து என அராஜகம் செய்வதும் கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டியுள்ளது. 

route thala

இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களிடம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 110 மற்றும் 107வதுவது பிரிவின்கீழ் ஓராண்டுக்கு நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் வாங்குவது என்றும் அந்த உறுதிமொழிப் பத்திரத்தை மீறி ரவுடித்தனம் செய்தால் அவர்களை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

இந்நிலையில் சென்னையில் ஓய்ந்துள்ள ரூட்டுதல கலாச்சாரம் திருச்சியில் முளைத்துள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் செய்யும் அட்டகாசம் வெளியாகியுள்ளது.