திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி!

 

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி!

திருச்சானூரில் நடந்து வரும் கார்த்திகைமாத பிரம்மோற்சவ விழாவில் இன்று முற்பகல் 11. 45 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

திருப்பதி: 

திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் டிசம்பர் 4 ஆம் தேதி  கொடி ஏற்றத்துடன் பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது.

thiruchchaanur

பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் தினமும் பத்மாவதி தாயார் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பிரம்மோற்சவ விழாவின் 8 ஆம் நாளான நேற்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  இந்த நிகழ்வில் தேரில் எழுந்தருளிய பத்மாவதி தாயார் நான்கு  மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து இரவில் குதிரை வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

thiruchchaanur

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று முற்பகல் 11. 45 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் என்னும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பாக செய்து உள்ளனர்.

இதனை அடுத்து  நாளை நடைபெறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.