திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

 

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ நேற்று கொடியேற்றத்துடன்  தொடங்கியது . இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திருப்பதி:

திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும்.

padmavathi

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டிற்கான கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

padmavathi thaayar

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை மாத பிரமோற்சவ விழா நேற்று தொடங்கி பத்து நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தையொட்டி கடந்த 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பண நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதனையடுத்து நேற்று முன்தினம் 3 ஆம் தேதி குங்குமார்ச்சனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

நேற்றையதினம் காலை 8.30 மணிக்கு கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவத்துக்கான கொடி ஏற்றப்பட்டது.

padmavathi

பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் தினமும் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளைகளும் பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதன்படிஇன்று தாயார் பெரிய சேஷ வாகனத்திலும் ,6-12-2018  வியாழக்கிழமை முத்துப்பந்தல் மற்றும் ஹம்ஸ வாகனத்திலும் 7-12-2018  வெள்ளிக்கிழமை கற்பக விருட்ச வாகனம் மற்றும் அனுமந்த வாகனத்திலும்

8.12.2018  சனிக்கிழமை முத்துப் பல்லக்கு மற்றும் கஜ வாகனத்திலும் 9.12.2018 ஞாயிற்றுக்கிழமை சர்வ பூபால வாகனம் மற்றும் சிகர  நிகழ்ச்சியான கருட சேவையும்.

padmavathi

அதனையடுத்து 10.12.2018 திங்கள்கிழமை சூரியபிரபை வாகனம் மற்றும் சந்திரபிரபை வாகனத்திலும் அதன் தொடர்ச்சியாக 11.12.2018 செவ்வாய்க்கிழமை திருத்தேர் மற்றும் குதிரைவாகனத்திலும் .

12.12.2018 புதன்கிழமை சக்கரஸ்நானம் நடைபெறுகிறது .அதனை தொடர்ந்து 13.12.2018  வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.