திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் டிசம்பர் 4ல் தொடக்கம்

 

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் டிசம்பர் 4ல் தொடக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழா வரும் டிசம்பர் 4ஆம்  தேதி தொடங்குகிறது.

திருப்பதியில் ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்வார்கள்.

thiru

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . அதனையடுத்து அன்று கோயில் மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். 

இரவில் ஊஞ்சல் சேவையும் தொடர்ந்து பத்மாவதி தாயார் தங்க, வைர நகைகளில் அலங்கரிக்கப்பட்டு சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலாவருவார். அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து 9 நாட்கள் இந்த பிரம்மாண்ட பிரம்மோற்சவ விழா நடைபெறும் 

thiru

இவ்விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.