திருக்குறளை கொண்டு சேர்க்க எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு …!

 

திருக்குறளை கொண்டு சேர்க்க எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு …!

உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க எத்தனையோ அனிமேஷன் படங்கள் வெளிவந்துள்ளன.

உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க எத்தனையோ அனிமேஷன் படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அது போய்ச் சேர்ந்ததா என்பது சந்தேகம் தான். ஆதலால் சுட்டி தொலைக்காட்சி இந்த முறை குழந்தைகளிடம் கண்டிப்பாகத் திருக்குறளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. 

அதன்படி தினமும் ‘பொம்மியும் திருக்குறளும்’ என்ற புதிய நிகழ்ச்சியை நேற்று முதல் சுட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது. தினம் ஒரு திருக்குறள் என்று ஒவ்வொரு குறளையும் 6 நிமிட எபிசோடாகத் தருகிறார்கள்.  குழந்தைகள் மனதில் எளிதில் பதியும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் இணைந்து பேராசிரியர் ஞானசம்பந்தன் நிகழ்ச்சியில் தோன்றுகிறார். 

boomiyum thirukuralum

இது குறித்து சுட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் கவிதா ஜாபின் பேசியதாவது ‘இன்றைய சூழலிலும் பாடப் புத்தகத்தில் இருக்கும் ஒரு மனப்பாடப் பகுதியாகத் தான் திருக்குறள் பார்க்கப்படுகிறது. இதை அடுத்த தலைமுறைக்கு எளிமையாக எப்படி கொண்டு செல்லலாம் என்ற யோசனை எழுந்தபோது உருவானது தான் ‘பொம்மியும் திருக்குறளும்’ நிகழ்ச்சி. 

boomiyum thirukuralum

வெறுமனே குறளும், விளக்கமும் சொன்னால், குழந்தைகளிடம் முழுமையாகச் சென்றடையாது. அதனால் தான் இந்த நிகழ்ச்சியை அனிமேஷன் முறையில் வழங்க திட்டமிட்டோம். இதற்கான அனிமேஷனை ‘கஸ்டோ ஸ்டுடியோ’ சிறப்பாகச் செய்து வருகிறது. அவர்கள் பலவிதமான அனிமேஷன் வேலைகள் வழியே சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார்கள். அதனால் தான் இந்த வேலையை அவர்களுடன் சேர்ந்து செய்கிறோம். 

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள். எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும், நகைச்சுவையாகப் பிரதிபலிப்பவர். குழந்தைகளிடம் விஷயத்தைத் திணிக்காமல், கதை சொல்லல் பாணியில் இருக்க வேண்டும் என்பதால், அவரை வைத்து இந்த நிகழ்ச்சியை வழங்குகிறோம்’ என்று கூறியுள்ளார்.