திரிஷா புகைப்படத்தை பதிவிட்டு ராணா குடும்பத்தை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி

 

திரிஷா புகைப்படத்தை பதிவிட்டு ராணா குடும்பத்தை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி

திரிஷாவுக்கு ராணா முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, ராணா குடும்பத்தை பற்றி பதிவு செய்துள்ளார் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி.

சென்னை: திரிஷாவுக்கு ராணா முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, ராணா குடும்பத்தை பற்றி பதிவு செய்துள்ளார் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி.

திரைப்படத்தில் வாய்ப்பு தருவதற்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தி சர்ச்சையை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. ஏஆர் முருகதாஸ், ராகவா லாரண்ஸ் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்களின் மீது அவர் குற்றம்சாட்டினார். சுஜி லீக்ஸ் சர்ச்சைக்கு பிறகு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது ஸ்ரீரெட்டி லீக்ஸ். தொடர்ந்து குற்றசாட்டுகளை கூறி வந்த அவர், சில காலம் அமைதியாக இருந்தார். தற்போது மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

திரிஷாவுக்கு ராணா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும், ராணா தம்பி தனக்கு முத்தம் கொடுக்கு புகைப்படத்தையும் பதிவிட்டு, ராமநாயுடு ஸ்டுடியோவில்தான் இது நடக்கிறது. சுரேஷ் பாபு பிள்ளைகள் தங்கள் தாத்தாவையே மிஞ்சிவிடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.