திராவிடம் என்பது நாட்டுக்கு சொந்தமானது: புதிய தத்துவத்தை வாரி வழங்கும் கமல்

 

திராவிடம் என்பது நாட்டுக்கு சொந்தமானது: புதிய தத்துவத்தை வாரி வழங்கும் கமல்

திராவிடம் ஒரு சில அமைப்புகளுக்கு சொந்தமானது இல்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கடலூர்: திராவிடம் ஒரு சில அமைப்புகளுக்கு சொந்தமானது இல்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டத்தில் நடிகர் கமல்ஹசன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மாவட்டத்தின் சில கிராமங்களில் மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு செய்திருக்கும் கிராம சபை கூட்டங்களில் கமல் பங்கேற்று பேசி வருகிறார்.

இதற்கிடையே கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல், அரசியல் என்பது தீண்டத்தகாதது அல்ல, அதை சுத்தப்படுத்தவேண்டும் என தெரிவித்தார். அதேபோல், திராவிட தத்துவம் என்பது நாடு தழுவிய கோட்பாடு என கூறிய அவர், அது ஒரு சில அமைப்புகளுக்கு சொந்தமானது இல்லை எனவும் கூறியுள்ளார். 

மேலும், அரசியல் காரணங்களுக்காக ஏழைகளை, ஏழைகளாகவே  சிலர் பாதுகாத்து வைத்துள்ளனர் என்றும் கமல் கூறியுள்ளார். 

இந்தியாவிலேயே சமூகநீதியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு திராவிட அரசியல் சித்தாந்தங்களே முக்கியப் பங்கு செலுத்தியிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் நிலையில், திராவிடம் என்பது நாடு தழுவியது என கமல் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.