தியானம் என்றால் என்ன என்பதற்கு பகவான் ரமணர் சொன்ன எளிய விளக்கம்..!

 

தியானம் என்றால் என்ன என்பதற்கு பகவான் ரமணர் சொன்ன எளிய விளக்கம்..!

தியானம் என்றால் என்ன? இதே கேள்வியை ஒரு முறை பகவான் ரமணரிடம் சிறுவன் ஒருநாள் கேட்டான். ரமண மகரிஷி சிரித்துக் கொண்டே, ஆசிரமத்தில் இருந்தவர்களிடம் அந்தச் சிறுவனுக்கு சாப்பிட ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். 

தியானம் என்றால் என்ன? இதே கேள்வியை ஒரு முறை பகவான் ரமணரிடம் சிறுவன் ஒருநாள் கேட்டான். ரமண மகரிஷி சிரித்துக் கொண்டே, ஆசிரமத்தில் இருந்தவர்களிடம் அந்தச் சிறுவனுக்கு சாப்பிட ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். 
சிறுவனும் சாப்பிட ஆரம்பித்த சமயமாக பார்த்து,சிறுவனிடம்,‘நான் எப்பொழுது ‘ம்’ என்று சொல்றேனோ அப்பொழுது தான் நீ இந்த தோசையை சாப்பிட ஆரம்பிக்கணும். அதுவரையில் சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது.அதே போல் நான் மீண்டும் எப்பொழுது ‘ம்’ சொல்கிறேனோ, அதன் பிறகு இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிந்ததா?’ என்றார் சிரித்துக் கொண்டே. சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சந்தோஷமாக போட்டிக்கும் சம்மதித்தான். சுற்றியுள்ளோர் குழப்பமாக இதைக் கவனித்து நின்றிருந்தனர்.

meditation

ரமண மகரிஷியின் ‘ம்’க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடியே தவிப்புடன் அவரது முகத்தைப் பார்த்தபடியே சிறுவன் காத்திருந்தான். சிறுவனைச் சிறிது நேரம் காக்க வைத்து,  ‘ம்’ என்று சொன்னார் ரமண மகரிஷி.
சிறுவன் சாப்பிட ஆரம்பித்துக் கொண்டே, எப்பொழுது மீண்டும் ‘ம்’ சொல்வாரோ, என்கிற பதை பதைப்புடன், பெரிய பெரிய துண்டுகளாக பிய்த்து எடுத்து அவசர அவசரமாக தோசையை சாப்பிடுவதும், ரமணரின் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்தான். நேரம் கரைந்தது. புன்சிரிப்புடன் அந்த சிறுவனையேப் பார்த்துக் கொண்டிருந்தார் ரமணர். 
தோசையோ சிறியதாகி ஒரு சிறிய துண்டு மட்டும் மீதமிருந்தது. இப்போது. சிறுவனும் அந்த சிறிய தோசை துண்டை, கையில் வைத்தபடியே,எப்பொழுது இந்தத் தாத்தா ‘ம்’ சொல்லுவார் என்று காத்திருந்தான்…

rama maharishi

சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்று ஆவலுடன் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.எதிர்பாராத ஒரு நொடியில் ‘ம்’என்று ரமணர் சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி துண்டை வாயில் போட்டுக் கொண்டான். ரமணர் விதித்த நிபந்தனைகளைக் கடைப்பிடித்த சந்தோஷம் சிறுவனின் முகத்தில் தெரிந்தது. இப்பொழுது ரமணர் சிறுவனிடம் பேச ஆரம்பித்தார்.
‘இரண்டு ‘ம்’ களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசையின் மீதும்,என் மீதும் இருந்ததோ, அதே போல தான்… நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தான் தியானம். இப்போது புரிந்ததா?’ என்று புன்னகையுடன் சிறுவனைப் பார்த்துக் கேட்டார்.
சந்தோஷமாக தலையசைத்தான் சிறுவன்.  இளம் வயதிலேயே மனதை ஒருமுகப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.