திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்கிறார் மு.க.ஸ்டாலின்

 

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்கிறார் மு.க.ஸ்டாலின்

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திருவாரூரை தக்கவைக்க திமுகவும், அந்த தொகுதியை கைப்பற்ற அமமுகவும், அதிமுகவும் கோதாவில் இருப்பதால் இந்த தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கிறது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். மேலும்  இக்கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.