திமுக முஸ்லிம் லீக்காக மாறிவிட்டது! ஹெச்.ராஜா கடும் தாக்கு.

 

திமுக முஸ்லிம் லீக்காக மாறிவிட்டது! ஹெச்.ராஜா கடும் தாக்கு.

கோவை வரதராஜபுரம் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு எதிரில் இருப்பது நீலிக்கோணாம்பாளையம்.அங்கு இருக்கும் சித்தி விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம்குறித்தும் ஹெச்.ராஜா கடும் எதிர்ப்புத்  தெரிவித்து இருக்கிறார். 

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக,கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதா? என்று ஒரு புதிய பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் ஹெச்.ராஜா.
கோவை வரதராஜபுரம் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு எதிரில் இருப்பது நீலிக்கோணாம்பாளையம்.அங்கு இருக்கும் சித்தி விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம்குறித்தும் ஹெச்.ராஜா கடும் எதிர்ப்புத்  தெரிவித்து இருக்கிறார். 

h-raja-09

அதேபோல அப்புச்சி கனகர் கோவிலில் இருந்த சிலைகள்,பெயர்ப்பலகை ஆகியவை அகற்றப்பட்டது குறித்துப் பேசிய ராஜா அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த கோவிலில் இருந்து அகற்றப்பட்ட அப்புச்சி கனகர் சிலை உட்பட மற்ற அனைத்துப் பொருட்களும் எடுத்த இடத்திலேயே வைக்கப்பட வேண்டும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அதோடு திமுக தலைவர் ஸ்டாலின் பக்கம் திரும்பிய ஹெச்.ராஜா, ஸ்டாலின் தமிழ் கலாச்சாரம், பண்பாடு இவற்றுக்கு எதிரியாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.அத்துடன் திமுக முஸ்லீம் லீக்காக மாறிவிட்டதாகவும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பது போன்ற காரியங்கள் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி இருக்கும் என்று இன்னொரு மிரட்டலையும் விடுத்தார்.

 

யாராவது ஹெச்.ராஜாவுக்கு தமிழ் நாட்டில் நடப்பது அவர்களின் பினாமி ஆட்சிதான் என்று ஞாபகப் படுத்துங்கப்பா என்று சிரிக்கிறார்கள் கோவை உடன் பிறப்புகள்.