திமுக முதுகில் சவாரி… அழகிரி வைக்கும் அக்னிப்பரீட்சையால் ஆடிப்போன நிர்வாகிகள்..!

 

திமுக முதுகில் சவாரி… அழகிரி வைக்கும்  அக்னிப்பரீட்சையால் ஆடிப்போன நிர்வாகிகள்..!

மாவட்டத் தலைவர்களுக்கு, மூன்று விதமான தேர்வுகளை வைக்க இருக்கிறார்கள். முதல் தேர்வாக மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்த, மாவட்டத் தலைவர்களுக்கு உத்தரவு போட்டு இருக்கிறார்.

முப்பது ஆண்டுகாலமாக திமுக- அதிமுக முதுகில்  சவாரி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தான் தன்மானம் தாண்டவமாகிறது. 

பிறகு… திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தங்கள் கூட்டணியை விமர்சித்து வருகின்றனர் சில நிர்வாகிகள்.  அது மட்டுமா? மாவட்டத்தலைவர்களுக்கு பரீட்சை எல்லாம் வைத்து தங்களது தனித்துவத்தை மீட்டெடுக்கக் கிளம்பி இருக்கிறார்கள் கதர் கட்சி நிர்வாகிகள். M K Stalin

விஷயம் இது தான்… காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு பரீட்சை வைத்திருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியில்  72 மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களில் யாரெல்லாம் நன்றாக செயல்படுகிறார்களோ அவர்களை மறுபடியும் மாவட்ட தலைவர்களாக நீடிக்க வைக்க, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முடிவு செய்திருக்கிறார். congress

இதற்காக, மாவட்டத் தலைவர்களுக்கு, மூன்று விதமான தேர்வுகளை வைக்க இருக்கிறார்கள்.  முதல் தேர்வாக மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்த, மாவட்டத் தலைவர்களுக்கு உத்தரவு போட்டு இருக்கிறார். இந்தக் கூட்டங்களில் எந்த குற்றம், குறையும் இல்லாமல் அனைத்து கோஷ்டியினரும் பங்கேற்பது  போல்  நடத்தி முடித்தால் முதல் கட்ட தேரில் வெற்றி பெற்றதாக அர்த்தம்.  அதனை வைத்தே அடுத்த கட்ட தேர்வுகளை அறிவிக்க இருக்கிறாராம். 

இதனை கேள்வி பட்ட மாவட்ட நிர்வாகிகள், ‘மாவட்ட தலைவர்களுக்கு மட்டும் தான் இந்தத் தேர்வா..? மாநிலத் தலைவரான அழகிரிக்கு இந்தத் தேர்வை வைத்தால் அவரது பதவி காலியாகி விடும். அவர் ஒரு கூட்டத்தை கூட்டி எந்த விதமான குற்றம், குறையுமில்லாமல் நடத்தி முடித்துக் காட்டட்டும் பார்க்கலாம் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.   M K Azhagiri

இந்த போட்டோவில் இருக்கும் மு.க.அழகிரிக்கும் இந்தக் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை.