திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை !

 

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை !

வயது முதிர்வின் காரணமாக இவர் ஒரு வருடத்திற்கு மேலாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் வயது 98. வயது முதிர்வின் காரணமாக இவர் ஒரு வருடத்திற்கு மேலாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அவர் கட்சி பணிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் கடந்த  மாதம் 24 ஆம் தேதி இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

ttn

அதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதனை அறிந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும்  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனே மருத்துவமனைக்கு விரைந்து அவரது உடல் நலன் குறித்து விசாரித்தனர். மேலும், அவருக்கு அளிக்கப் பட்டு வரும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.