திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

 

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்  அனுமதி!

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திமுக-வின்  பொதுச்செயலாளராக இருந்து வருபவர் அன்பழகன். முதுமை காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் ஏதும் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு, நேற்று இரவு மணியளவில் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து  சென்னை அண்ணாசாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரது உடல்நலக்குறைவுக்கு வயது மூப்பே காரணம் என்று  எனக் கூறப்படுகிறது. 

இதையறிந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். எனினும் அவரது உடல்நலம் குறித்த அறிக்கைகள் ஏதும் இன்னும் வெளியிடவில்லை.