திமுக பேரணியின் விளம்பரத்திற்கு உதவிய அதிமுக, காவல்துறைக்கு நன்றி : மு.க ஸ்டாலின் பேச்சு

 

திமுக பேரணியின் விளம்பரத்திற்கு உதவிய அதிமுக, காவல்துறைக்கு நன்றி : மு.க ஸ்டாலின் பேச்சு

திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூரிலிருந்து தொடங்கி, புதுப்பேட்டை வழியாகச் சென்று ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது.  

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக தலைமையில் பேரணி நடைபெற்றது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூரிலிருந்து தொடங்கி,  புதுப்பேட்டை வழியாகச் சென்று ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது.  

ttn

நீதி மன்ற உத்தரவின் படி, பேரணியைக் கண்காணிக்க  முக்கிய சந்திப்பு மற்றும் மாடிகளில் 110 கேமராக்கள். 4 ட்ரோன்கள் மூலம் பேரணி பதிவு செய்யப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில், குடியுரிமை சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். 

ttn

பேரணியில் இறுதியில் பேசிய மு.க ஸ்டாலின், இது பேரணி இல்லை, போர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெரும் வரை இந்த போராட்டம் தொடரும் . திமுக போராட்டத்தின் விளம்பரத்திற்கு உதவிய காவல்துறைக்கும் அதிமுகவினருக்கும் நன்றி என்று கூறினார். அவர் கூறியதை போலவே, அடுத்த போராட்டம் நடத்துவதற்கு அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை  நடைபெற்று வருகிறது.