திமுக – பாமக கூட்டணி: இது முக ஸ்டாலினுக்கு தெரியுமா?!..

 

திமுக – பாமக கூட்டணி: இது முக ஸ்டாலினுக்கு தெரியுமா?!..

தவறான செய்திகளை தருவதிலும், அதிகாரவர்க்கத்துக்கு சார்பாய் எழுதுவதிலும் தினமலர் செய்தி நிறுவனத்துக்கு நிகர் அந்நிறுவனமேதான்.

சென்னை: தவறான செய்திகளை தருவதிலும், அதிகாரவர்க்கத்துக்கு சார்பாய் எழுதுவதிலும் தினமலர் செய்தி நிறுவனத்துக்கு நிகர் அந்நிறுவனமேதான்.

மக்களவை தேர்தலில் திமுக – பாமக கூட்டணி என யாருக்கும் தெரியாத அரிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது தினமலர். வேலூரில் பாமக ஏகே மூர்த்தி நிற்கிறாராம், அதே தொகுதியை திமுக ஜெகத் ரட்சகன் கேட்டிருப்பதால் கூட்டணி கட்சிக்கு கொடுப்பதா இல்லை ஜெகத் ரட்சகனையே நிற்க வைப்பதா என திமுக மேலிடம் குழப்பத்தில் உள்ளார்களாம். இந்த செய்தியை படித்தால் திமுக மேலிடம் உண்மையிலே குழம்பிதான் போகும்.

dinamalar

இதேபோல்தான் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடந்தபோது, 70% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக பொய்யான செய்தியை தினமலர் வெளியிட்டது என ஆசிரியர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.