திமுக, திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு !

 

திமுக, திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு !

திமுக திருச்சி மாவட்ட தெற்கு கழக செயலாளராக இருந்த கே.என் நேரு சமீபத்தில்  தலைமை கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

திமுக திருச்சி மாவட்ட தெற்கு கழக செயலாளராக இருந்த கே.என் நேரு சமீபத்தில்  தலைமை கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனால் அந்த பதவிக்கு ஆட்கள் பரிந்துரை செய்யும் ஆலோசனை நடைபெற்று வந்தது. அதன் பிறகு திருச்சி தெற்கு மற்றும் வடக்காக இருந்த திருச்சி மாவட்டத்தை, வடக்கு, மத்திய மற்றும் மேற்கு என்று மூன்றாகப் பிரித்து நிர்வாகிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி, இன்று திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை திமுக கழக பொதுச் செயலாளர் கே.அன்பழகன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 

ttn

அந்த அறிக்கையில், ” திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கே.என் நேரு அவர்கள் தலைமை கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதால்,  திருச்சி வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்கள் திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முசிறி, துறையூர் மண்ணச்சநல்லூர், ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளராகத் திரு. காடுவெட்டி தியாகராஜன் அவர்களும், 

திருச்சி மேற்கு, திருவரங்கம், இலால்குடி ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராகத் திரு. வைரமணி எம்.எல்.ஏ பிஏ.பிஎல் அவர்களும், 

திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.