திமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் – அசத்தும் மீன்வளத்துறை அமைச்சர்!

 

திமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் – அசத்தும் மீன்வளத்துறை அமைச்சர்!

திமுக திமிங்கலம் என்றால் அதிமுக திமிங்கலத்திடம் மாட்டாத விலாங்கு மீன்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “கைவினை பொருட்கள் செய்வோரை ஊக்கப்படுத்தி அவர்களிடம் பொருட்களை விற்று விற்பனை செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
 கைத்தறி பொருட்களை பயன்படுத்தினால் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும். இது மிக பெரிய இயக்கம். யாரை எதிர்த்து எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார் என்பது எல்லாருக்கு தெரியும்.

Jayakumar

அதிமுகவில் இருந்து யாரும் திமுகவிற்கு போகமாட்டார்கள். சாக்லேட் கொடுத்து ஏமாற்றும் வேளையில் ஸ்டாலின் ஈடுபடுகிறார். திமுக திமிங்கலம் என்றால் அதனிடம் மாட்டாத விலங்குமீன்கள் அதிமு. அதிமுகவை ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார். அது நடக்காது. முதல்வரின் வெளிநாடு சுற்று பயணத்தால் பெரும் பயன் கிடைக்கும். கூட்டணி என்பது வேறு இணைந்து செயல்படுவது என்பது வேறு. அதுபோலதான் அதிமுகவும் பாஜகவும்” என்று கூறினார்.