‘திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை’ – கமல்ஹாசன்

 

‘திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை’ – கமல்ஹாசன்

திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை எவ்வாறு தடுப்பது மற்றும் மத்திய அரசுக்கு எவ்வாறு அழுத்தம் தருவது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

all party meeting

அக்கூட்டத்தில், காங்கிரஸ், மதிமுக, விசிக, திராவிடர் கழகம், இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தின் முடிவில், அணை கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி வருகின்ற டிசம்பர் 4-ஆம் தேதியன்று திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “திமுக சார்பில் நடைபெற்ற தோழமை கட்சி கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை. திமுக சார்பில் நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி போராட்டத்திற்கும் இதுவரை அழைப்பு வரவில்லை” என தெரிவித்துள்ளார்.