திமுக கூட்டணியில் பாமக இருக்காது: திருமாவளவன் அதிரடி

 

திமுக கூட்டணியில் பாமக இருக்காது: திருமாவளவன் அதிரடி

திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக – மதிமுக – காங்கிரஸ் – விடுதலை சிறுத்தைகள் கட்சி – இடதுசாரிகள் என பிரம்மாண்ட கூட்டணி அமையும் சூழல் நிலவி வருகிறது. இந்த கூட்டணிதான் நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாமகவையும் இதில் இணைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பாமக – விசிக ஒரே அணியில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறுகையில், திமுக கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. நெருடலும் இல்லை. கூட்டணியில் பாமகவை சேர்க்க திமுகவினர் முயற்சித்து வருவதாக கூறுவது தவறு. சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக சேர்த்து கொள்வார்கள். அதற்காக சுற்றி வளைத்தெல்லாம் பேச மாட்டார்கள். 

என்னை பொறுத்தவரை திமுக கூட்டணியில் பாமக சேராது. அதற்கான வாய்ப்பு இல்லை. விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக பேசினால்தான் சாதி ஓட்டுக்களை வாங்க முடியும் என்று பாமக நினைக்கிறது. அதனால்தான் விடுதலை சிறுத்தைகளை பழித்து பேசுவதை குறிக்கோளாக அவர்கள் வைத்துள்ளனர். திட்டமிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என்றார்.