திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி இறுதி; ஒரு தொகுதி ஒதுக்கீடு!!

 

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி இறுதி; ஒரு தொகுதி ஒதுக்கீடு!!

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டணி தொடர்பான அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் கடும் எதிர்பார்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைகிறது. அதிமுக-பாமக-பாஜக கட்சிகளும், திமுக-காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.