திமுக கூட்டணிக்கு வாக்களிக்க சொன்ன அனிதா அண்ணன்; கோபத்தில் கமல்ஹாசன் நீட் தேர்வுக்கு ஆதரவு?!…

 

திமுக கூட்டணிக்கு வாக்களிக்க சொன்ன அனிதா அண்ணன்; கோபத்தில் கமல்ஹாசன் நீட் தேர்வுக்கு ஆதரவு?!…

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான்.

தேர்தல் வருவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது பிரச்சார வேலைகளில் பிஸியாக இருக்கிறது. வாக்கு சேகரிக்க சினிமா ஸ்டைலில் ஒரு வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் யாருக்கு ஓட்டு போடக்கூடாது என நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் அப்பா, அம்மாவை கேளுங்கள் என பேசியிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த அனிதாவின் அண்ணன் மணிரத்தினம், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான். ஒரு கலைஞனாக உங்களை பிடிக்கும் என பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் நீட் தேர்வு நீக்கம் பற்றி விமர்சித்துள்ளார்.

சாத்தூரில் நாடாளுமன்ற வேட்பாளர் முனியசாமிக்கு ஆதரவாக பேசிய கமல், நீட் தேர்வை எதிர்த்து வழக்கு போட்டவர்கள் நாங்கள்தான் என்கின்றனர். நீட் தேர்வை நீக்கிவிட்டால் தமிழகம் முன்னேறி விடுமா? என்றார். இது அனிதா அண்ணனுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து கமல் பேசியது என சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வாக்கு சேகரிக்க என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற மனப்பான்மைக்கு வந்திருக்கிறார் கமல்ஹாசன்.

நீட் தேர்வு நீக்கத்தின் அவசியம் குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பேசி வரும் வேளையில், கமல்ஹாசன் இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

 

இதையும் வாசிக்க: பணக்காரன் போல் நடித்து மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த கட்டிடத் தொழிலாளி: சிக்கியது எப்படி?