திமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் அதிரடி!

 

திமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் அதிரடி!

திமுக நடத்த இருந்த கண்ட பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை: திமுக நடத்த இருந்த கண்ட பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசையும், முதலமைச்சர் பழனிசாமியையும் கண்டித்து ‘கமிஷன், கரப்சன், கலெக்சன்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 120 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த திமுக தலைமை திட்டமிட்டிருந்தது.

இதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. அதனையடுத்து, உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு  தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க-வுக்கு இடைக்கால அனுமதி வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், பொதுக்கூட்டத்துக்கு மொத்தமாக அனுமதி மறுக்கப்படுகிறதா? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், காவல்துறையிடம் அனுமதி பெற்று தான் பொதுக்கூட்டம் நடத்தும் இடங்களைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் பொதுக்கூட்டத்துக்காக அளிக்கப்பட்ட மனுக்கள் பற்றிய விவரங்களை விரிவாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தி.மு.கவுக்கு உத்தரவிட்டுள்ளது.