திமுக ஒரு ஷகிலா கட்சி – ஹெச். ராஜா விமர்சனம்

 

திமுக ஒரு ஷகிலா கட்சி – ஹெச். ராஜா விமர்சனம்

பொருளாதாரத்தில் அ, ஆ தெரியாதவர் ப.சிதம்பரம். அவர் சொன்ன கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. 14 நாடுகளில் சொத்து வைத்திருக்கும் ப.சிதம்பரத்திற்கு இந்தியாவை பற்றி ஏதும் தெரியாது. தமிழர்களை குடிக்க வைத்தது கருணாநிதி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “பொருளாதாரத்தில் அ, ஆ தெரியாதவர் ப.சிதம்பரம். அவர் சொன்ன கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. 14 நாடுகளில் சொத்து வைத்திருக்கும் ப.சிதம்பரத்திற்கு இந்தியாவை பற்றி ஏதும் தெரியாது. தமிழர்களை குடிக்க வைத்தது கருணாநிதி. தமிழ் நாட்டை முழு மது விலக்கு மாநிலமாக மாற்ற அதிமுக ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மருத்துவ வல்லுனர்களின் முயற்சியால் 60 நாட்களுக்குள் கொரானாவிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். 

Hraja

ஒரே நாடு, ஒரே ரேசன் என்பதை எதிர்த்த திமுக போன்ற கட்சிகள் மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மக்கள் எப்போதும் துன்பத்திலேயே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். ஸ்டாலின் பிரதமருக்கு எதிராக மோசமான செயல்பாட்டை கையில் எடுத்து வருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.  இதற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக கட்சி என்பது ஷகிலாவின் கட்சி. கொரானவிற்கு எதிராக மட்டும் நாம் கவனம் செலுத்த வேண்டும். சிறு, சிறு பிரச்சனைகளை கண்டு கொள்ள கூடாது” எனக் கூறினார்.