திமுக எம்.பி.,களுக்கு குறி… தட்டித் தூக்கத் தயாராகும் பாஜக..!

 

திமுக எம்.பி.,களுக்கு குறி… தட்டித் தூக்கத் தயாராகும் பாஜக..!

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் ராஜ்யசபா எம்.பிக்களை வளைத்தது போல தமிழகத்தில் திமுக எம்.பிகளுக்கு குறி வைத்திருக்கிறது பாஜக.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் ராஜ்யசபா எம்.பிக்களை வளைத்தது போல தமிழகத்தில் திமுக எம்.பிகளுக்கு குறி வைத்திருக்கிறது பாஜக. kani

பா.ஜக.,வுக்கு மக்களவையில்  தனிப் பெரும்பான்மை இருந்தாலும், ராஜ்யசபாவில் 70  எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர். இதனால், நாடு முழுக்க, எதிர்க்கட்சிகளில் இருக்கிற ராஜ்யசபா, எம்.பி.,க்களுக்கு வலை வீசி வருகிறார்கள். இதில், முதல் கட்டமாக  ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின், நான்கு எம்.பி.,க்கள்  பா.ஜகவில் சேர்ந்து விட்டனர். kani

இவர்கள் அரசியலமைப்பு சட்டம் 10 வது அட்டவணை பிரிவு 6ன் அடிப்படையில் பாஜகவில் இணைய தீர்மானம் போட்டுள்ளனர்.  அதாவது ஒரு கட்சியில் மூன்றில் ஒரு பங்குபேர் வெளியே சென்றால் கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஆகையால் தமிழகத்தில் தி.மு.க.வில் அடுத்து ராஜ்ய சபா எம்.பியாகப் போகிறவர்களை கொத்தாக பா.ஜ.க,வுக்கு இழுக்கிற திட்டத்தை, நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். stalin

மு.க.ஸ்டாலின் அதிமுக எம்.எல்.ஏக்களை திமுகவுக்கு இழுத்து ஆட்சியை கலைக்கப்பார்க்கிறார். ஆனால், அவருக்கே செக் வைக்கும் அளவில் திமுகவின் ராஜ்யசபா எம்.பிகளுக்கு வலைவீசக் காத்திருக்கிறது.