திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

 

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

இவர் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 பேரிடம் ரூ. 95 லட்சம் மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை அதிமுக அரசு ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு அதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்து கொண்டார். செந்தில் பாலாஜி இப்போது திமுக எம்.எல்.ஏ வாக இருந்து வருகிறார். இவர் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 பேரிடம் ரூ. 95 லட்சம் மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

ttn

அந்த புகாரின் பேரில் நேற்று கரூர் டிஎஸ்பி தலைமையிலான 15 பேர் கொண்ட குழு செந்தில் பாலாஜி வீட்டில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தங்க நகைகள், வாகனங்கள் மற்றும் கார், சொத்து உள்ளிட்டவற்றின் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின் அவரது வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். அவருக்கு எதிரான ஆதாரங்கள் உறுதியாக இருப்பதால் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்தார். 

ttn

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் அவரது பாஸ்போர்ட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜி மீதான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த மோசடி வழக்கு  எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது. அதனால் செந்தில் பாலாஜி வரும் வியாழக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.