திமுக எம்.எல்.ஏ சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் !

 

திமுக எம்.எல்.ஏ சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் !

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தில் அமைச்சர் வேலுமணிக்கும், திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கும் கடும் வாக்குவாதம் நிலவியது. அப்போது, அன்பழகன் அமைச்சர் வேலுமணியைப் பார்த்து ‘உட்கார்’ என்று ஒருமையில் பேசியது  சபையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது. 

TTN

இதனையடுத்து சபாநாயகர் தனபால், ஜெ.அன்பழகன் அமைச்சரைப் பார்த்து ஒருமையில் பேசியது தவறு என்றும் இனி இப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர், திமுக தலைவர் ஸ்டாலின் ஜெ.அன்பழகன் அமைச்சரைப் பார்த்து ஒருமையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். 

TTN

இந்நிலையில், ஜெ.அன்பழகன் ஆளுநர் உரையைக் கிழித்து சபாநாயகர் முன் எறிந்ததால், அவரை சட்டப்பேரவை கூட்டத் தொடரிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. அதன் படி, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனைக் கூட்டத்தொடரில் இருந்து நீக்கி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அதனால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் முடித்து வைக்கும் வரை ஜெ அன்பழகன் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.