திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று கூடுகிறது

 

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று கூடுகிறது

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கிறது.

சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. மேலும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி வருகின்றன. 

இந்நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது இனி வரும் சட்டப்பேரவை நாட்களில் திமுகவின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பன குறித்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.