திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா உறுதி…மகள், மருமகனும் பாதிப்பு!

 

திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா உறுதி…மகள், மருமகனும் பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 5,849பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 89,561பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேராவூரணி அதிமுக எம்எல்ஏ, ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்க பாண்டியன், திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசன் அதிமுக உளுந்தூர்பேட்டை எம்எல் குமரகுரு உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா உறுதி…மகள், மருமகனும் பாதிப்பு!

தூத்துக்குடி திமுக எம்எல்ஏவான கீதா ஜீவனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவரது மகள் மற்றும் மருமகனுக்கும் கொரோனா உறுதியானதால் அவர்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.