திமுக இளம் பெண் ஊராட்சித் தலைவருக்கு அடி… அ.தி.மு.க-வினர் வன்முறை

திமுக இளம் பெண் ஊராட்சித் தலைவருக்கு அடி… அ.தி.மு.க-வினர் வன்முறை

திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தி.மு.க பெண் ஊராட்சித் தலைவரை அ.தி.மு.க-வினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்குடி ஊராட்சியின் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த திவ்யா (24) தேர்வு செய்யப்பட்டார். பட்டதாரி பெண்ணான இவர் தேர்வு செய்யப்பட்டதற்கு ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

dmk

இந்தநிலையில், ஊராட்சிமன்றத்தின் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. தி.மு.க-வுக்கு ஆதரவாக சுயேட்சையாக வெற்றிபெற்ற உதயகுமார் என்பவர் வந்துள்ளார். அவரை அ.தி.மு.க-வினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு திவ்யா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் அழகர் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து திவ்யா மற்றும் அவரது சகோதரரைச் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

divya

இதில் காயமடைந்த இருவரையும் குடவாசல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தாக்கப்பட்ட வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஊராட்சி பெண் தலைவரை முன்னாள் தலைவர் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தாக்கியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.