திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள்- திருமாவளவன்

 

திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள்- திருமாவளவன்

திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் படத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேராசிரியர் க.அன்பழகன் உருவப்படம் திறப்பு விழாவில் துரைமுருகன், கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழகத்தில் மதவாதமும், சாதியவாதமும் சூழும் நிலையில் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளார் ஸ்டாலின். சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் அரண்களாக இருந்தவர்கள் கலைஞரும் பேராசிரியரும்… தற்போது நெருக்கடியான காலச்சுழல் நிலவுகிறது. தமிழகத்தில் சாதியவாதமும் மதவாதமும் சூழும் நிலையில் மிகப்பெரிய சவாலை ஏற்க கூடிய நிலையில் ஸ்டாலின் உள்ளார். பேராசிரியர், கலைஞரின் மறைவு திமுகவிற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கே பேரிழப்பு. 

Thirumavalan

திமுகவுக்காக வெறும் தேர்தலுக்காக மட்டும் கூட்டணி வைக்கவில்லை, சமுகநீதியை திமுக காப்பாற்றும் என்ற நோக்கில்தான் திமுக உடன் கூட்டணி வைத்துள்ளோம். இந்தியா முழுவதும் பெரியாரின் தேவை உருவாகி உள்ளது. பெரியாரிய சிந்தனைகளை காப்பாற்றுவது என்பதுதான் நம்மின் தொண்டு. ஸ்டாலினை ஆட்சி பீடத்தில் ஏற்றக் கூடாது என சிலர் கங்கணம் கட்டித் திரிகிறார்கள். ஸ்டாலினை ஆட்சி பீடத்தில் அமராவிட்டால் திமுகவை அழித்துவிடலாம், திமுக அழிந்தால் சமுகநீதியும் அழித்துவிடலாம் என சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.