திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்

திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 156, அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.

திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்

முன்னதாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் சட்டமன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 133 பங்கேற்ற கூட்டத்தில் ஒருமனதாக ஸ்டாலின் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று ஆளுநரை சந்திக்கிறார்.

திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் இன்று காலை 10 மணிக்கு ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வான கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கிறார் மு.க.ஸ்டாலின். அத்துடன் திமுக அமைச்சரவைப் பட்டியலை ஆளுநரிடம் வழங்கும் அவர் வரும் ஏழாம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. கொரோனா தொற்று பரவல் காலமென்பதால் குறைந்த அளவிலான நபர்களுடன் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது.