திமுக- அதிமுக மோதல்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கந்தசாமியின் கார் கண்ணாடி உடைப்பு! 

 

திமுக- அதிமுக மோதல்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கந்தசாமியின் கார் கண்ணாடி உடைப்பு! 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கந்தசாமியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கந்தசாமியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் செங்கோட்டையனின் தலையீடு காரணமாக டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியதாக கூறி ”அமைச்சர் செங்கோட்டையன் அத்து மீறல்” என்ற தலைப்பில் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் ஒட்டியிருந்ந சுவரொட்டியை முன்னாள் எம்.எல்.ஏ கந்தசாமி தலைமையிலான அதிமுகவினர் கிழித்தெறிந்தனர்.

car mirror

இது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதாகவும் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும் பங்களாபுதூா் காவல்நிலைத்தில் திமுகவினா் மீது புகாா் அளித்துள்ளனர்.