திமுகவை விமர்சித்தது எனக்கு தெரியாது: கமலை வன்மையாக கண்டிக்கிறேன்: கே.எஸ்.அழகிரி

 

திமுகவை விமர்சித்தது எனக்கு தெரியாது: கமலை வன்மையாக கண்டிக்கிறேன்: கே.எஸ்.அழகிரி

திமுகவை விமர்சித்ததற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுகவை விமர்சித்ததற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆனால்  முன்னதாக திமுகவை அழுக்குப் பொதி என கமல் விமர்சித்திருந்தார். 

stalin

இந்நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ‘கமல் ஹாசன் திமுகவை கடுமையாக விமர்சித்தது தமது கவனத்துக்கு அப்போது வரவில்லை. கமல் ஹாசனின் விமர்சனம் பாஜகவுக்கு தான் உதவும். அதற்காக கமலுக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும் ‘ என்று கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார்.

kamal

முன்னதாக திமுக பற்றிய கமல் ஹாசன் விமர்சனத்திற்கு திமுக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் விடுத்த அறிக்கையில் திமுகவை விமர்சனம் செய்வது அரைவேக்காட்டுத்தனம் என்று பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.