திமுகவை நோக்கி படையெடுக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் – அதிர்ச்சியில் பாஜக

 

திமுகவை நோக்கி படையெடுக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் – அதிர்ச்சியில் பாஜக

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா… என்ற கேள்வி தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக வெவ்வேறு காலகட்டத்தில் எதிரொலித்தது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு வைப்பதுபோல கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பரில், தான் புதிய கட்சி ஒன்றை தொடங்குவேன் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

அதனால் 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் ஆகியவற்றில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தன்னுடைய இலக்கு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, அதாவது இந்த ஆட்சி முடிவடையும் பொழுது வரும் தமிழகம் முழுவதற்குமான ஒட்டுமொத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே தான் கட்சி ஆரம்பித்து 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டு முதல்வர் ஆவேன் என்று தெளிவாக விளக்கினார்.

திமுகவை நோக்கி படையெடுக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் – அதிர்ச்சியில் பாஜக

கொரோனா பேரிடரால் ரஜினி கட்சி ஆரம்பிப்பது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் 2020 டிசம்பர் மாத இறுதியில் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன். ஜனவரில் கட்சி தொடங்குவது நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால், ’அண்ணாத்தே’ பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றிருந்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். அது முடிந்து சென்னைக்கு திரும்பியவர் மிக நீளமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தன் உடல்நிலையை கவனத்தில் கொண்டு கட்சி தொடங்க போவதில்லை என்றும் எனக்காக காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

திமுகவை நோக்கி படையெடுக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் – அதிர்ச்சியில் பாஜக

இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த பாஜகவினர் பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் சென்ற வாரத்தில் ரஜினி மன்றத்தினர் என்று கூறிக்கொண்டு சிலர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு அடுத்த நாள் இப்படி என்னை வற்புறுத்தக்கூடாது. என்னை மீண்டும் அரசியலுக்கு வர சொல்லி வற்புறுத்த வேண்டாம் என்று ரஜினிகாந்த் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார். எனவே ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பது 100% உறுதியாகி விட்டது.

எனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அடுத்து என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தனர் இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்ட செயலாளர்கள் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்கள்.

சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திமுகவை நோக்கி படையெடுக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் – அதிர்ச்சியில் பாஜக

ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்கான சூழல் இருப்பதாக நினைக்க பட்ட காலத்தில் தேர்தல் ஆணையத்தில் ஆட்டோ சின்னத்தை ஒரு முகவரியில் பதிவு செய்யப்பட்டது. அது தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த ஸ்டாலினின் முகவரியில்தான் அந்த கட்சியை பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே ரஜினியின் விருப்பத்தின் பேரால் அல்லது ரஜினியின் கட்சியின் சார்பாக அது பதிவு செய்யப்பட்டது என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது அந்த  ஸ்டாலினே இப்போது திமுகவில் இணைந்துள்ளார். அவர் மட்டுமில்லாமல் ராமநாதபுரம் தேனி கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர்.

இந்த செய்தி ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது இன்னும் பல ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணையபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினி ரசிகர் மன்ற நபர்கள் பாஜகவில் சேர்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியினருக்கு இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.