திமுகவுக்கு தாவும் பாமக முக்கியப்புள்ளி… அதிர்ச்சியில் ராமதாஸ்..!

 

திமுகவுக்கு தாவும் பாமக முக்கியப்புள்ளி… அதிர்ச்சியில் ராமதாஸ்..!

வைத்தியை மட்டம் தட்டாமல் விட்டுவிட்டால் நாளடைவில் காடுவெட்டி குருவைப் போல ஆகி விடுவார் என்பதால் தான் இதை கடைபிடிக்கின்றனர்.

காடுவெட்டி குருவின் வலதுகரமாக இருந்தவர் அரியலூர் வைத்தி. இவரை கடந்த வாரம் பாமகவின் மாநில துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சி தலைவர் ஜி.கே. மணி. ஏன் இவரை பாமகவில் இருந்து நீக்கினார்கள்? திமுகவில் சேர போகிறாரா என்ன பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் என்னதான் நடக்கிறது பாமக வட்டாரத்தில்?  என விசாரித்தோம். 

கடுவெட்டி குரு உயிரோடு இருக்கும்போது அவருக்கு ஆல் இன் ஆல் அழகுராஜா வைத்திதான். இவர் இல்லாமல் அரியலூர் பகுதியில் ஏதும் நடக்காது. அவருக்கு வலதுகரமாக இருந்தவர் வைத்தி. இவரை கொஞ்ச காலமாக உயர்த்தி பிடிக்கிறார்களோ என்ற தகவல் வந்து கொண்டிருந்தது. அதனை இப்போது ஊர்ஜித படுத்தி இருக்கிறார்கள். வைத்தியும் தன்னுடைய நிலை தெரியாமல் அதிகப்படியாக நடந்து கொண்டார்.

vaithi

போலீஸ் மற்றும் அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு ரவுடியிசம் கட்டப்பஞ்சாயத்து என அதிகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்தச் செயல் தலைமைக்கு தெரியவந்தது. அதே போல அவரின் மனைவி தேன்மொழி தற்போது ஆண்டிமடம் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை சேர்மன் பதவி ஆக்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் வைத்தி. 

கூட்டணிக் கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் மறைமுகமாக பல வேலைகளைச் செய்ய தொடங்கினார். அதேபோல மாவட்டத்தில் எந்த ஒரு கூட்டம் இருந்தாலும் மாவட்ட செயலாளரை புறக்கணிக்கிறார் என பாமக தலைமைக்கு புகார் வந்தது. அதனால்தான் அவர் மீது பாமக தலைமை நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. கட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் இவருக்கு வன்னியர் சங்கத்தில் கூடுதல் பொறுப்பை கொடுப்பது போல் கொடுத்து இவர் பல்லை பிடுங்கி விட்டார்கள்.

vaithi

இதனை தெரிந்து கொண்டு திமுகவில் உள்ள ஆ.ராசா மற்றும் சிவசங்கரி நாடியிருக்கிறார் வைத்தி. அவர்களும் ஸாட்லினிடம் பேசி வைத்தியை திமுகவில் சேர்க்க சம்மதம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் உறவைத் தொடர்ந்து கட்சியில் யாருக்கும் எந்த பதவியிலும் முக்கியத்துவம் கூடாது. தான் ஒருவர்தான் இந்த கட்சியில் ஒன் மேன் ஆர்மி போல இருக்க வேண்டுமென சின்னய்யா நினைக்கிறார். வைத்தியை மட்டம் தட்டாமல் விட்டுவிட்டால் நாளடைவில் காடுவெட்டி குருவைப் போல ஆகி விடுவார் என்பதால் தான் இதை கடைபிடிக்கின்றனர்.