திமுகவுக்கு குட்- பை… மாநிலங்களவை எம்.பி. ஆனார் பிரசாந்த் கிஷோர்! 

 

திமுகவுக்கு குட்- பை… மாநிலங்களவை எம்.பி. ஆனார் பிரசாந்த் கிஷோர்! 

பிரசாந்த் கிஷோர் பீகாரைச் சேர்ந்த இந்த இளைஞர்தான் 2012 ஆம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வியூகங்களை வகுத்து தந்தவர். தொட‌ர்ந்து 2014 ஆம் ஆண்‌டு மக்களவைத் தேர்தலின்போது, மோடி பிரதமராகுவதற்காக அதிரடியாக பல வியூகங்களை வகுத்ததால், நாடு முழுவதும் அறியப்பட்டார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், அவருக்கு வெற்றியை தேடித்தந்தார்.

பிரசாந்த் கிஷோர்

2018 ஆம் ஆண்டு நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார் பிரசாந்த் கிஷோர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரவித்தது. இதற்கு பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இதையடுத்து தமிழகத்துக்குள் நுழைந்த பிரசாந்த், திமுகவுக்கு தேர்தல் பணிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார். 

இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு, மார்ச் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் இருந்து, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு அப்பதவியை வழங்க, திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.  கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களை கைப்பற்றி, மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.  இந்தாண்டு இறுதியில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரசாந்த் கிஷோரை உள்ளே நுழைத்துள்ளார் மம்தா. 

பிரசாந்த் கிஷோர்

தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு நிலையில் மாநிலங்களவை எம்.பி. கிடைத்துள்ளதால் திமுகவுக்கு குட்பை சொல்லிவிட்டு மேற்குவங்கத்திற்கு சென்றுவிடுவார் என கூறப்படுகிறது. ஏனெனில் தமிழகத்திற்கு முன்பாக தேர்தலை எதிர்கொள்ளும் மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்காகவும் பணியாற்ற அவர் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடதக்கது.