திமுகவுக்கு அமித் ஷா கொடுத்த இனிமா… கதறும் காங்கிரஸ்..!

 

திமுகவுக்கு அமித் ஷா கொடுத்த இனிமா… கதறும் காங்கிரஸ்..!

திமுக எம்.பி,களுக்கு மெல்ல மெல்ல காங்கிரஸ் எதிர்ப்பு மாத்திரைகளைக் கொடுத்து விழுந்து வைத்தனர். அந்த மாத்திரை இப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியிடையே பீதியை கிளப்பி இருக்கிறது.

தமிழக அரசியலில் மட்டுமல்ல. அகில இந்திய அரசியலையும் கலக்கி வருகிறது திமுக- காங்கிரசின் குடுமிப்பிடி சண்டை. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக மீறியது சரியா என்று கேட்டு அந்த சண்டையை தொடங்கி வைத்தவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.stalin

இப்போது அது விஸ்தரிப்பு அடைந்து துரைமுருகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் அறிக்கை போர் நடத்தும் அளவுக்கு தீவிரம் அடைந்து இருக்கிறது. இப்படி திமுக-காங்கிரஸ் மோதல் புயல் மையம் கொண்டு இன்றைக்கு நடந்தது அல்ல. இதற்கான விதை கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக -காங்கிரஸ் அணி அமோக வெற்றி பெற்றதற்கு பிறகு விதைக்கப்பட்டது. பிடித்தவர்கள் இந்தியாவின் நம்பர் ஒன் பிரமுகர் மோடியின் நம்பர் 2 பிரமுகர் அமித் ஷாவும்தான். 

அந்தத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை கூட அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் காங்கிரஸ் 8 சீட்டுகள் பெற்றதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த வெற்றி மோடியையும் அமித்ஷாவையும் நெஞ்சத்தை நெருக்கி முள்ளாக குத்தியது. தமிழகத்தில் எப்படியும் காங்கிரசை வளர விடக்கூடாது என்ற அர்ஜெண்டாவுடன் உடனடியாக அவர்கள் களத்தில் இறங்கினார்கள். அதன் முதற்கட்டமாக வெற்றி பெற்று வந்த திமுக எம்.பி.,களை அழைத்து அவர்களுக்கு முக்கியமான நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைமைப் பதவிகளை தந்தனர்.

amit shah

இது பாஜகவினரின் புருவத்தை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற திமுகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர்களது தொகுதி பிரச்சினைகளை நிறைவேற்ற உதவி கரங்களை நீட்டினர். இதனைத் தொடர்ந்து நாடளுமன்ற திமுகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர்களது தொகுதி பிரச்சினை களை நிறைவேற்ற உதவி கரங்களை நீட்டினர். இப்படி தங்கள் அன்பு மழையில் நனைந்த திமுக எம்.பி,களுக்கு மெல்ல மெல்ல காங்கிரஸ் எதிர்ப்பு மாத்திரைகளைக் கொடுத்து விழுந்து வைத்தனர். அந்த மாத்திரை இப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியிடையே பீதியை கிளப்பி இருக்கிறது.