திமுகவில் குழப்பமா? முதல்வர் வேட்பாளர் யார்?? – கனிமொழி எம்.பி விளக்கம்

 

திமுகவில் குழப்பமா? முதல்வர் வேட்பாளர் யார்?? – கனிமொழி எம்.பி விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “நீட் தேர்வு தேவையிலை என்பது தான் திமுக தொடர்ந்து சொல்லக்கூடிய கருத்து. தமிழக மாணவர்களை பாதிக்கக்கூடிய ஒன்றாக இன்றைக்கு நீட் உருவாகி உள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து இந்தாண்டு கூட ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். எத்தனையோ உயிர்களை நீட் தேர்வுக்காக இழந்து இருக்கோம், நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி வருகிறார். எக்காரணம் கொண்டும் தமிழக அரசு நீட் தேர்வினை ஏற்றுக்கொள்ளக்கூடாது, தொடர்ந்து எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசு மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய தூரோகம்

திமுகவில் குழப்பமா? முதல்வர் வேட்பாளர் யார்?? – கனிமொழி எம்.பி விளக்கம்

கொரோனா பிரச்சினையில் தமிழக அரசு எடுத்து இருக்கும் முன்னெடுப்புகள் மிக தவறான முன் உதாரணத்தினை உருவாக்கி கொண்டு இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் மிக மோசமான சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் பல குளறுபடிகள், பல குழப்பங்கள், இறந்தவர்களை எண்ணிக்கையை மறைக்க கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம். எந்த தெளிவும் இல்லாமல் மத்திய அரசு ஒரு முடிவு சொல்கிறது, மாநில அரசு ஒரு முடிவு எடுக்கிறது.

திமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை, திமுக முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. அதிமுகவை பற்றி சொல்ல முடியாது அவர்கள் வெற்றி பெறபோவதில்லை, அங்கு குழப்பம் இருப்பதால் பிரச்சினையும் இல்லை” எனக் கூறினார்.