திமுகவில் கிடைத்த முக்கிய பொறுப்பு: உதயநிதியின் அடுத்த பிளான் இதுதானாம்!

 

திமுகவில் கிடைத்த முக்கிய பொறுப்பு: உதயநிதியின் அடுத்த பிளான் இதுதானாம்!

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன்  அறிவிப்பு வெளியிட்டார். 

சென்னை : தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

udhay

திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்த மு.பே.சாமிநாதன் அண்மையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்ததையடுத்து கடந்த 4 ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன்  அறிவிப்பு வெளியிட்டார். 

 

udhay

இந்நிலையில் திமுக இளைஞரணியின் அமைப்பாளர்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  அன்பகத்தில் இன்று காலை நடைபெற உள்ளது. அதற்கு முன்பாகவே இக்கூட்டம் தொடர்பாக இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை  சந்தித்த  அவர், கட்சியின் இளைஞரணி செயலாளராகப் பதவியேற்றபின் நான் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால் அதில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். அதற்கான முழு விவரமும் பின்னர் அறிவிக்கப்படும்’ என்றார்.