திமுகவில் ஏன் இணைந்தேன்? செந்தில் பாலாஜி விளக்கம்

 

திமுகவில் ஏன் இணைந்தேன்? செந்தில் பாலாஜி விளக்கம்

திமுகவில் ஏன் இணைந்தேன் என செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

சென்னை: திமுகவில் ஏன் இணைந்தேன் என செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

தினகரனின் வலதுகரமாக செயல்பட்ட செந்தில் பாலாஜி இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல்  12 மணிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அவர் கௌரவித்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்களை அரவணைத்து செல்லும் சிறந்த தலைவராக ஸ்டாலினை பார்க்கிறேன். அவர் மேல் கொண்ட ஈர்ப்பால் திமுகவின் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக்கொண்டேன். கரூர் மாவட்ட மக்களின் விருப்பத்திற்கேற்ப இணைந்தேன்.  ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆட்சி பாஜகவுக்கு அடிபணிந்து மக்கள் விரோத ஆட்சியை வழங்கி கொண்டிருக்கிறது. தமிழக உரிமையை விட்டுக்கொண்டிருக்கிறது.

senthil

தமிழக உரிமையை மீட்பதற்கு கடுமையாக உழைப்பை கொடுத்து கொண்டிருக்கும் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்துவேன். என்னோடு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திமுகவில் இணைய இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் திமுகவே வெல்லும். நான் பல கட்சிகளில் இருந்து இங்கு வரவில்லை. 1996-ம் ஆண்டு சுயேச்சையாக கவுன்சிலராக வென்ற பிறகு ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுகவில் இருந்தேன். அவர் மறைவிற்கு பிறகு ஒரு தலைமையின் கீழ் இருந்தேன் இப்போது ஸ்டாலின் மேல் உள்ள ஈர்ப்பால் திமுகவில் இணைந்திருக்கிறேன். திமுக வெற்றி பெறுவதற்காக நிர்வாகிகளோடு இணைந்து பாடுபடுவேன்.

balaaji

நான் திமுகவில் இணைந்தது தினகரனுக்கு ஆதங்கத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அவரது கருத்துக்கு பதில் சொல்வது அரசியல் மரபு இல்லை. மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் திமுகவுக்கு வாருங்கள் என நான் அழைக்கவில்லை. இந்த ஆட்சி கவிழ்ந்த பிறகு ஈபிஎஸ் விவசாயம் பார்க்க சென்றுவிடுவார். நான் ஏற்கனவே இருந்த இயக்கத்தில் ஒரு மாதகாலமாக களப்பணியில் இருந்து ஒதுங்கியே இருந்தேன். தினகரன் அணியிலும், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையின் கீழும் இருக்கும் பல முக்கிய நபர்கள் திமுகவில் இணைவார்கள். மு.க.ஸ்டாலின் கரூரில் யாரை சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராக நிறுத்தினாலும் நாங்கள் பணியாற்றி அவரை வெற்றி பெற செய்வோம் என்றார்.