திமுகவில் இணையும் சசிகலா சகோதரர்… நாள் குறிச்சாச்சு..!

 

திமுகவில் இணையும் சசிகலா சகோதரர்… நாள் குறிச்சாச்சு..!

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் விழுவதுதான் இப்போதைக்கு உசித்தம் என முடிவெடுத்து திமுகவில் இணைய நாள் குறித்து வருகிறாராம் திவாகரன்.

‘நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திமுக தலைவர் ஸ்டாலின்தான். அவர் பின்னால் அணிதிரள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார் திவாகரன்.

அடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், ’’பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த அரசகுமார் இவ்வாறுதான் பேசினார். பேசிவிட்டு ஒரு வாரத்தில் திமுகவில் வந்து சேர்ந்துவிட்டார். இன்று திவாகரன் பேசி உள்ளார். அவர் எங்கே போகிறார், எங்கே வருகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு’’ என்று தெரிவித்தார். 

divakaran

அதிமுகவில் இப்போதைக்கு மரியாதை இல்லை. தான் ஆரம்பித்த பெரியார் திராவிட முன்னேற்றக்கழக கட்சியில் உறுப்பினர்கள் 50 பேரை தாண்டாது. அடுத்து பாஜகவில் இணையும் வகையில் பியூஸ் கோயலை சென்று தனது மகனை அனுப்பி நூல் விட்டுப்பார்த்தார். எடுபடவில்லை. அதனால் தான் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் விழுவதுதான் இப்போதைக்கு உசித்தம்  என முடிவெடுத்து திமுகவில் இணைய நாள் குறித்து வருகிறாராம் திவாகரன்.