திமுகவில் இணைந்த அதிமுக ஸ்லீப்பர் செல்கள்; வருமான வரித்துறை சோதனையின் பின்னணி?!

 

திமுகவில் இணைந்த அதிமுக ஸ்லீப்பர் செல்கள்; வருமான வரித்துறை சோதனையின் பின்னணி?!

நேற்று வேலூர் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் சீனிவாச காந்தி, அதிமுகவில் இருந்து விலகி துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில், திமுக பொருளாளர் துரைமுருகன் உடைமைகளில் சோதனை நடத்தியது வருமான வரித்துறை. 10 லட்சம் ரூபாய் சிக்கியதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து துரைமுருகன், எங்களை தேர்தல் பணியினை செய்யவிடாமல் மத்திய, மாநில அரசுகள் செய்யும் கூட்டுசதிதான் இந்த வருமான வரித்துறை சோதனை என பேட்டியளித்தார்.

துரை

இந்நிலையில், வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கோடிக் கணக்கில் பணம் சிக்கியுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுக்க வார்டு வாரியாக பெயர் எழுதி வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வேளையில், இந்த பணம் துரைமுருகன் தரப்புக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

ராஜ்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு தரப்பாக பிரிந்து கிடக்கிறது. டிடிவி தினகரன் பக்கம் ஒரு அணியும், ஓபிஎஸ் – இபிஎஸ் பக்கம் ஒரு அணியும் இருக்கிறது. இந்த இரு தரப்பில் இருந்தும் கடந்த சில மாதங்களுக்குள் பலர் திமுகவில் இணைந்துவிட்டனர். 

அதிமுக தரப்பில் இருந்து திமுகவில் பலர் இணைந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் முன்பு தன் ஆதரவாளர்களுடன் வந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அவர் தனக்கு சீட் வழங்காத காரணத்தினால் திமுகவில் இணைந்ததாக கூறப்பட்டது. அதேபோல் நேற்று வேலூர் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் சீனிவாச காந்தி, அதிமுகவில் இருந்து விலகி துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுக ஸ்லீப்பர் செல்கள்

திமுக

வேலூர் மாவட்டத்தில் வருமான வரித்துறையினரிடம் சிக்கியுள்ள கோடிக்கணக்கான பணம் திமுக பொருளாளர் துரைமுருகன் தரப்புக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகத்தின் பணம் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள், அதிமுக தரப்புக்கு வேலை செய்யும் ஸ்லீப்பர் செல்கள் என்ற கருத்தும் பரவி வருகிறது. இந்தப் பண விஷயத்தில் அவர்களது தலையீடு உள்ளது எனவும் கூறப்படுகிறது. இது வேலூரில் தேர்தல் நடப்பதை தடுக்கும் முயற்சி என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் வாசிக்க: கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!