திமுகவின் இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி!

 

திமுகவின் இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக திமுக நடத்தும் போராட்ட களங்களிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும், பிரச்சாரங்களிலும் தென்படுகிறார். திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், உதயநிதியின் இளைஞரணி செயலாளராக நாளை பதவியேற்கவுள்ளார். 

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக திமுக நடத்தும் போராட்ட களங்களிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும், பிரச்சாரங்களிலும் தென்படுகிறார். திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், உதயநிதியின் இளைஞரணி செயலாளராக நாளை பதவியேற்கவுள்ளார். 

உதயநிதி ஸ்டாலினின் உழைப்பையும் திறமையையும் பார்த்த வியந்த திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் முன்வைத்த கோரிக்கையையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சியில் பொறுப்பு கொடுக்கப்படவுள்ளது.