திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் : தலைமை கழகம் அறிவிப்பு!

 

திமுகவின்  இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் : தலைமை கழகம் அறிவிப்பு!

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுகவுக்காகப் பரப்புரை மேற்கொள்ளக் களமிறங்கிய ஒருவர் உதயநிதி ஸ்டாலின். அனல் பறக்கும் தனது  பிரசாரத்தால்  உதயநிதி மக்களை வெகுவாக கவர்ந்தார்.

udhay

இதனால் உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று  மாவட்டச் செயலாளர்கள் பலர் வலியுறுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியது. அதே சமயம்  திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்த மு.பே.சாமிநாதன் அண்மையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்தார்.  

dmk

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.