திமுக,அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி பா.ரஞ்சித் அண்ணன் வெற்றி !

 

திமுக,அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி பா.ரஞ்சித் அண்ணன் வெற்றி !

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக இயக்குநர் பா.ரஞ்சித்தின் அண்ணன் வழக்கறிஞர் பிரபு தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்டார்.

கர்லாக்கம், பாலமேடு, வேளச்சேரி,ஆலத்தூர் என வில்லிவாக்கம் ஒன்றியத்தில் உள்ள 1 ஆவது வார்டில் மொத்தமாக 10,654 வாக்குகள் உள்ளன. இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக இயக்குநர் பா.ரஞ்சித்தின் அண்ணன் வழக்கறிஞர் பிரபு தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் இளம்பருதியும், அதிமுக வேட்பாளர் ராமமூர்த்தியும் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது இயக்குநர் பா.ரஞ்சித் இவருக்காகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ttn

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் இளம்பருதி  3591 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமமூர்த்தி 2555 வாக்குகளும் பா.ரஞ்சித்தின் அண்ணன் 3846 வாக்குகளும் பெற்றனர். இதில் பிரபு, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை 255 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று  வில்லிவாக்கம் ஒன்றியக் கவுன்சிலராகினார். வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, தனக்கு வாக்களித்த அனைவர்க்கும் நன்றி என்றும் பிரச்சாரத்தின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார். சினிமா மட்டுமல்லாது பொதுநிகழ்ச்சிகளிலும் அரசியல் பேசும் பா.ரஞ்சித்தின் அண்ணன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.