தினம் ஒரு கஜா வேண்டுமா உங்கள் சாதிய போக்கை ஒழிக்க?

 

தினம் ஒரு கஜா வேண்டுமா உங்கள் சாதிய போக்கை ஒழிக்க?

– அருண் பாண்டியன்

இயற்கை பேரிடரின் போது மனிதனுக்கு மனிதன் உதவுவது பெருமையல்ல கடமை. உதவி செய்வதை வெளியே சொல்லி சக மனிதனை உதவிய செய்ய தூண்டும் மோசமான நிலையில்தான் இந்த சமூகம் இருக்கிறது. யார் வீட்டில் எழவு விழுந்தா எனக்கென்ன என பெரும்பான்மையானோர் இருக்கின்ற வேளையில், களத்தில் இறங்கி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் இதே மனிதம் சாதிய பிரச்னைகளின் போது எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களில் 80-க்கும் அதிகமான சாதிய படுகொலைகள் நிகழ்ந்திருக்கிறது, கஜா புயலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைவிட அதிகம். புயல், வெள்ளத்தின் போதெல்லாம் ஒன்றிணைந்து உதவும் பெரும்பான்மை சமூகம், சாதிய படுகொலைகள் நிகழும்போது கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?

இதேபோல் ஒன்றிணைந்து சாதியத்தை எதிர்க்க இங்கு பெரும்பான்மையானவர்களுக்கு எது தடையாக இருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஊரையும் புயல் சூறையாடினால்தான் உங்கள் மனிதம் நீடித்திருக்குமா. இதை இந்த நேரத்தில் கேட்பது அவசியமில்லாதது என்று தோன்றினால் அது உங்கள் சுயசாதி பற்று, வேறு எந்த நேரத்தில் கேட்கக் கூடிய சூழல் இங்கு இருக்கிறது. சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் நீங்கள் இதேபோல் ஒன்றிணையவில்லை என்றால், நீங்கள் என்ன உதவி செய்தும் இந்த சமூகம் முன்னேற முடியாது என்றே தோன்றுகிறது.