தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா…புதிய ஓராண்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ

 

தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா…புதிய ஓராண்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ஓராண்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ஓராண்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ஓராண்டு ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் பலர் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் அவர்களுக்கு வசதியாக பயன்படும் வகையில் இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ.2399 விலையில் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால், எஸ்.எம்.எஸ் ஆகிய பலன்கள் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 50 ஜிபி அதிவேக டேட்டா பலன் வழங்கக் கூடிய ரூ.151, ரூ.201, ரூ.251 ஆகிய ஆட்-ஆன் பேக்குகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

reliance jio

முன்னதாக வொர்க் ப்ரம் ஹோம் ரீசார்ஜ் திட்டங்கள் பிரிவில் ரூ.2121 என்ற ரீசார்ஜ் பிளானை ரிலையன்ஸ் ஜியோ கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதில் தினமும் 1.5 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால், எஸ்.எம்.எஸ் ஆகிய பலன்கள் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.