தினமும் 10 இந்தியர்கள் மரணம் ! அபாய வேலைகளை வெளிநாட்டவருக்கு மட்டுமே தருகிறதா வளைகுடா நாடுகள் ?

 

தினமும் 10 இந்தியர்கள் மரணம் ! அபாய வேலைகளை வெளிநாட்டவருக்கு மட்டுமே தருகிறதா வளைகுடா நாடுகள் ?

வேலைக்காக சென்று வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் சராசரியாக ஆண்டுக்கு 10 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ’டிசம்பர் 18’ ஒவ்வொரு ஆண்டும் ‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக’ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அனுசரித்து வருகிறது.

வேலைக்காக சென்று வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் சராசரியாக ஆண்டுக்கு 10 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

Death-Increases

’டிசம்பர் 18’ ஒவ்வொரு ஆண்டும் ‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக’ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அனுசரித்து வருகிறது.

International-Migrants-Day

இடம்பெயர்வு மற்றும் பணம் அனுப்புதல்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வெளிநாட்டு நாணயத்தை அனுப்புவதில் முன்னணியில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு 80 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.57000 கோடி) என அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள் தங்கள் நாட்டிற்கு 67 பில்லியன் டாலர் அனுப்பி வைத்துள்ளனர். மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகியவை தரவரிசையில் அடுத்த இடங்களை பிடித்துள்ளன.

China-Flag

பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்களால் வளரும் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படும் பணம் 2018-ஆம் ஆண்டில் 528 பில்லியன் டாலராக உள்ளதாக உலக வங்கி தெரிவிக்கிறது. 

வளைகுடா நாடுகளில் சுமார் 3 மில்லியன், பிரிட்டனில் 1 மில்லியன் இந்தியர்கள், கனடாவில் ஒன்றரை மில்லியன் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

பிற நாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்கள் பணக்காரர்கள் அல்ல. அவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய தொழிலாளர்கள் போதுமான ஊதியம் மற்றும் தேவையான வசதிகள் கிடைக்காமல் அவதிபடுகின்றனர் என  உலக வங்கி தெரிவிக்கின்றது.

வளைகுடா நாடுகளில் 2012 முதல் 2018 நடுப்பகுதி வரை, கடினமான நிலையில் வேலை செய்வதால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 இந்திய தொழிலாளர்கள் மரணித்துள்ளனர் என உலகப் புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான Commonwealth Human Rights Initiative அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம் இந்தியத் தொழிலாளர்கள் கடினமான மற்றும் பாதகமான சூழ்நிலைகளில் பணியாற்றுவதுதான் என கூறுகிறது.